இலங்கை
வெலிக்கடை – அங்கொட பகுதியில் அயலவரை அடித்துக் கொன்ற சந்தேக நபர் கைது!
வெலிக்கடை – அங்கொட பகுதியில் அயலவரை அடித்துக் கொன்ற சந்தேக நபர் கைது!
வெலிக்கடை – அங்கொட பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் நேற்று (26) மாலை முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
அங்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே, இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தகராறு காரணமாக குறித்த பெண்ணை சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அயலவர் எனவும்,
உயிரிழந்தவரும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணிகளைச் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது முல்லேரிய மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெலிக்கடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
