Connect with us

இலங்கை

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தில்!

Published

on

Loading

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தில்!

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை ஆகும்.

Advertisement

 அந்த அழகை மெருகூட்டும் வகையில் இலங்கையில் பல சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றன.

அதிலும் ஐந்து சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் காணப்படுகின்றது.

அதில் ஒன்று யுனேஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலமாக சிகிரியா உள்ளது. சிங்கத்தை போன்ற பாரிய கற்பாறையில் இது அமைந்துள்ளது. 

Advertisement

 1144 அடி உயரமான இந்த குன்று முழுவமும் காணப்படும் ஓவியங்களே, அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நின்கின்றன.

 அடுத்து இராமாயண இதிகாசம் சொல்லும் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. நுவரெலியா அசோக வனம் அதிகம் பிரம்மிக்கப்படும் சுற்றுலாத்தலமாகும்.

இராமாயணத்தின்படி சீதையை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இடத்திற்கு வருகைத் தந்த அனுமான், இந்த இடத்திலேயே சீதையை கண்டு தரிசித்ததாகப் கூறப்படுகிறது. 

Advertisement

images/content-image/1759033905.jpg

 உலகில் சீதைக்காக ஆலயம் அமையப் பெற்ற இடமாக இந்த இடம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

அடுத்து இராவணா எல்லை நீர்வீழ்ச்சி ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது, இராமாயணத்துடன் நேரடியாகவே தொடர்புப்படுத்தப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது, இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

நான்காவதாக திருகோணமலை நகரில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம். 

Advertisement

 மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்க, நடுவில் பாரிய மலை குன்றொன்று அமைந்துள்ளது. இந்த மலை குன்றிலேயே இந்த திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.

சோழர்களின் ஆட்சி இலங்கையிலும் தொடர்ந்தமைக்கான வரலாற்று சின்னங்கள், இன்று இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. 

குறிப்பாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் சோழர்களின் ஆட்சி அடையாளங்களாகக் காணப்படும் பௌத்த விகாரைகளும், கட்டடங்களும் இதற்கு சான்றாகும்.

Advertisement

இது தவிர பல சுற்றுலாத் தலங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.

 எனினும் மேற்குறிப்பிட்ட 5 தலங்களும் உலகளவில் இன்றுவரை பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன