பொழுதுபோக்கு
இடுப்பை ஆட்டிதான் இவ்ளோ ரீச் ஆகிருக்கேன்; ஆனா நான் க்ளாமரை ப்ரமோட் பண்ணல: ரீல்ஸ் அக்கா நிஜ முகம்
இடுப்பை ஆட்டிதான் இவ்ளோ ரீச் ஆகிருக்கேன்; ஆனா நான் க்ளாமரை ப்ரமோட் பண்ணல: ரீல்ஸ் அக்கா நிஜ முகம்
இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர்களை விட இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றார்கள். சிலர் எளிமையாக வீடியோ போட்டு பிரபலமாகிறார்கள். சிலர் கவர்ச்சியாக வீடியோ போட்டு பிரபலமாகிறார்கள்.அந்த வரிசையில் வந்தவர் தான் ப்ரீத்தி ஆர்னிகா, இவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டதன் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர். ரசிகர்கள் இவரை ரீல்ஸ் அக்கா என்று அழைக்கின்றனர். இந்நிலையில், ப்ரீத்தி ஆர்னிகா தான் போடும் ரீல்ஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, “எல்லாரும் டிக்டாக்-யில் ரீல்ஸ் செய்து குறும்படத்தில் நடித்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வெள்ளித் திரைக்கு வருவார்கள். ஆனால், நான் முதலில் படத்தில் தான் நடித்தேன். மேலே இருந்து கீழே குதிக்கும் காட்சி தான் முதலில் எடுத்தார்கள்.அப்ப அந்த அளவிற்கு எனக்கு நடிக்க தெரியாது. இயக்குநர் சொல்லிக் கொடுத்து நடித்தேன். அந்த படம் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ஆல்பம் பாடலில் நடித்தேன். அந்த பாடல் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. அதன்பின்னர், யூடியூப் சேனலில் வெப் தொடர்களில் நடித்தேன் சீரியலில் நடித்தேன்.இருந்தாலும், நான் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. எங்கு போனாலும் என்னை யாருக்கும் தெரியவில்லை. என் தோழி ஒருவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருந்தார். ஆனால், அவர் வெளிய போனால் எல்லோருக்கும் தெரியும்.இவ்வளவு ப்ராஜெக்ட் செய்தும் யாருக்கும் என்னை தெரியவில்லை என்றதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட ஆரம்பித்தேன். முதலில் காமெடியாக தான் ரீல்ஸ் செய்தேன். அது பெரிதாக ரீச்சாகவில்லை. அதன் பிறகு ‘அன்ன நட சிலுக்கு சிங்காரி’ பாடலுக்கு கொஞ்சம் இடுப்பை ஆட்டி நடனம் ஆடுனேன். அதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருந்தது.அதன் பிறகு மார்டன் டிரஸ் போட்டு ரீல்ஸ் போட ஆரம்பித்தேன். அதன்பிறகு தான் ரீல்ஸ் அக்கா என்று பிரபலமானேன். சினிமா என்பது ஒரு கலவை தான். அதுமாதிரி தான் என் இன்ஸ்டாகிராமும் இருக்கும். ஆனால், நீங்கள் எல்லோரும் நான் கவர்ச்சியாக ரீல்ஸ் செய்தது பற்றி மட்டும் தான் பேசுகிறீர்கள்.நான் வெறும் கிளாமர் மட்டுமே புரொமோட் செய்யவில்லை. நான் நடிகையாவதற்கு தேவையான ரீல்ஸ்கள் தான் எனது இன்ஸ்டாகிராமில் இருக்கிறது. சினிமாவில் ஏழு வருடமாக இருந்து அட்ஜஸ்ட்மெண்ட் என்று செல்வதை விட ரீல்ஸ் மூலம் என்னை நானோ புரொமோட் செய்கிறேன். இதன் மூலம் என்னை தேடி வாய்ப்புகள் வருகிறது” என்றார்.
