பொழுதுபோக்கு
என் தாத்தாவுக்கு 8 பொண்டாட்டி, ஒரு தெருவே எங்க வீடு தான்; எம்.ஆர்.ராதா குறித்து உண்மை உடைத்த பேரன்!
என் தாத்தாவுக்கு 8 பொண்டாட்டி, ஒரு தெருவே எங்க வீடு தான்; எம்.ஆர்.ராதா குறித்து உண்மை உடைத்த பேரன்!
தமிழ் சினிமாவில் நடிகவேள் என்ற அடையாளத்துடன் திகழ்ந்த நடிகர் எம்.ஆர்.ராதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல திருமணங்களை செய்துள்ளார் என்று அவரது பேரணும் நடிகருமான வாசு விக்ரம் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில், முற்போக்கு சிந்தனைகளுடன் படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஆர்.ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில், காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.எம்.ஆர்.ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தபோதும் நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அதேபோல் சிவாஜி திரையில் அறிமுகமாவதற்கு முன்பே, எம்.ஆர்,ராதாவுக்கும் இவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளர். சினிமாவில் கருத்துக்களை பேசும், எம்.ஆர்,ராதா ரியல் வாழ்க்கையில் பல திருமணங்களை செய்துள்ளார். இது குறித்து பேசிய அவரது பேரன், வாசு விக்ரம், சினியுலகம் யூடியூப் சேனலில் பேசியுள்ளார். எங்க தாத்தா எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள் இல்ல, 7-8 பேர் இருப்பார்கள். எனக்கு தெரிந்து இத்தனை பேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு தெரியாமல் எத்தனை பேர் என்று சொல்ல முடியாது. 8 மனைவிகள் என்றாலும் அனைவரையும் ஒரே வீட்டில் வைத்து வாழ்ந்து வந்தவர். தேனாம்பேட்டையில், ஒரு தெருவே எங்கள் வீடுதான். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனைவியை வைத்திருந்தார், அன்றைய காலக்கட்டத்தில் 2 மனைவிகள் இருந்தாலே, மனஉளைச்சல் அதிகமாகி செத்துவிடுவார்கள். ஆனால் தாத்தா அப்படி இல்லை. அவர் கமெண்ட் அப்படி இருக்கும்.எங்களுக்குள் சண்டை வரும், ஆனால் நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்பது போல் எங்களுக்குள் பாசம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. பெரிய சண்டைகள் எதுவும் வரவில்லை. ஆனால் இன்றுவரை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எனக்கு வாழ்க்கை கொடுத்தது ராதிகா தான். என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்தவர் ராதாரவி சித்தப்பா. எங்க அப்பா வாசு இளம் வயதிலேயே இறந்துவிட்டார், ஆனால் அவருடனோ அல்லது என் தாத்தா எம்.ஆர்.ராதாவுடனோ ஒரு போட்டோகூட நான் எடுத்தது இல்லை.எங்க அப்பா ரொம்ப ட்ரிங் பண்ணுவார். ஆனால் என் தாத்தா அப்படி இல்லை அளவோடு தான் குடிப்பார். இங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு, 4 மணி நேரத்தில் நைட் 10 மணிக்கு திருச்சிக்கு நாடகம் போட கிளம்பிவிடுவார். அப்போது எல்லாம் ஒரே ரோடு தான். நாடகத்திற்கு தலைமை தாங்க யார் வருகிறார் என்பதை யோசிக்கவே மாட்டார். உடனடியாக தொடங்கிவிடுவார் என்று வாசு விக்ரம் தனது தாத்தா குறித்து பேசியுள்ளார்.
