பொழுதுபோக்கு
நீங்களும் வயது அதிகமான பொண்ண கல்யாணம் பண்ணுங்க; லைஃப் நல்லாருக்கும்: வி.ஜே.சங்கீதா ஓபன் டாக்
நீங்களும் வயது அதிகமான பொண்ண கல்யாணம் பண்ணுங்க; லைஃப் நல்லாருக்கும்: வி.ஜே.சங்கீதா ஓபன் டாக்
சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் வில்லியாக கலக்கிய நடிகை வி.ஜே.சங்கீதா தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்துகொண்டது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில், இது குறித்து அவரே ஒரு நேர்காணலில் பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலில், பூர்ணா என்ற வில்லி கேரக்டரில் நடித்திருந்தவர் வி.ஜே.சங்கீதா. இந்த சீரியல், வி.ஜே.சங்கீதாவுக்கு பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் மலர் என்ற டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த சீரியலில் அவருக்கு மாணவராக நடித்த நடிகர், அரவிந்த செஷூ என்பவரை வி.ஜே.சங்கீதா திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே ஒருசில வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், அரவிந்ததை விடவும், சங்கீதா வயதில் மூத்தவர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் திருமணத்தின்போது நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.இதனிடையே பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு சங்கீதா தனது கணவர் அரவிந்துடன் கொடுத்துள்ள ஒரு நேர்காணலில் இது குறித்து விளக்கமும் பதிலடியும் கொடுத்துள்ளார். திருமணம் செய்துகொள்ளவே கூடாது என்று நினைத்தேன். அதனால் அரேன்ஜ் மேரேஜ் வேண்டாம் என்று காதல் செய்து செட் ஆனால் திருமணம் செய்துகொள்ளலாம். இல்லை என்றால் இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் அரவிந்த் எனக்கு கல்யாண ப்ரபோசல் கொடுத்தார்.எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக ஒப்புக்கொண்டேன். அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் நடந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அதே போல் எங்கள் வீட்டில் இருப்பவர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது இடையில் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 2025-ல் இருக்கிறோம். பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். வயது ஒரு தடை இல்லை. மேலும் நீங்களும் வயதில் மூத்த பெண்னை திருமணம் செய்து பாருங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சங்கீதா கூறியுள்ளார்.ஜெய்பீம் படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்த அரவிந்த செஷூ அடுத்து விஜய் டிவியின் புதிய சீரியலான அய்யனார் துணை என்ற சீரியலில், சோழன் கேரக்டரில் நடித்து வருகிறார். ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்த வி.ஜே.சங்கீதா, சில கட்ட முயற்சிகளுக்கு பிறகு வி.ஜே.வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு, முழு நேரமாக சின்னத்திரையில், கவனம் செலுத்திய நிலையில், அடுத்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
