Connect with us

சினிமா

போதும் நிறுத்திக்கோங்க…ஆபாச பதிவுகளால் மன வேதனையில் நடிகை மஹிமா நம்பியார்…

Published

on

Loading

போதும் நிறுத்திக்கோங்க…ஆபாச பதிவுகளால் மன வேதனையில் நடிகை மஹிமா நம்பியார்…

2012ல் சமுத்திரகனி நடிப்பில் எம் அன்பழகன் இயகத்தில் வெளியான சாட்டை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மஹிமா நம்பியார். இப்படத்தினை தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணுக்கு ஜே, மகாமுனி, சந்திரமுகி 2, ரத்தம், 800, நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் மஹிமா.இந்நிலையில் மஹிமா நம்பியாரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் சிலர் வேண்டுமென்றே தவறாக பரப்பி வருவதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.அதில், கடந்த சில நாட்களாக என் பெயரில் தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களுடன் கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சிலர் பரப்பி வருகிறார்கள்.சம்பந்தப்பட்டவர்கள் இத்தனைய செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்.இந்த அவதூறு பிரச்சாரத்தால் தனது மன அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் மிகவும் வேதனை அளிப்பதாகவும், இது எனது கடைசி எச்சரிக்கை என்றும் மஹிமா நம்பியார் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன