பொழுதுபோக்கு
முதல் 2 படத்தில் விஜய் – அஜித்துக்கு ஜோடி; இவர் இப்போ பிரபல சீரியலில் அம்மா நடிகை: எந்த சீரியல் தெரியுமா?
முதல் 2 படத்தில் விஜய் – அஜித்துக்கு ஜோடி; இவர் இப்போ பிரபல சீரியலில் அம்மா நடிகை: எந்த சீரியல் தெரியுமா?
கடந்த 1995-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான தேவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. விஜய் நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைத்தது. அதன்பிறகு, தனது 2-வது தமிழ் படமாக அஜித்துடன் வான்மதி படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியாக அமைந்தது.தொடர்ந்து விஜயுடன் வசந்த வாசல், செல்வா, ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதி, வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த கேரக்டரில் நடித்திருந்தார். கடைசியாக 2009-ம் ஆண்டு, அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தில் நடித்திருந்த சுவாதி, அதன்பிறகு சினிமாவில் நடிக்காத நிலையில், தற்போது ஜீ தமிழின் பாரிஜாதம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார்.குமுதம் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில் தனது முதல் படமான தேவா, அதில் விஜயுடன் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், தேவா படத்தில் நடிக்க என்னை ஆடிஷனுக்கு அழைத்தார்கள். ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை என்று என் அம்மா சொல்லிவிட்டார். அதன்பிறகு, மீண்டும் போன் வந்தது போய் பார்க்கலாம் என்று வந்தோம். அப்போது எஸ்.ஏ.சி சார் வீட்டில் தான் போட்டோஷூட் நடந்தது. அங்கு தான் விஜயை பார்த்தேன். அப்போது அவர் அப்கம்மிங் நடிகர் தான். போட்டோஷூட் முடிந்தவுடன் ஒருநான் காத்திருக்குமாறு எஸ்.ஏ.சி சொன்னார். இதே கேரக்டருக்கு அப்போது முன்னணி நடிகையாக இருந்த ஒருவரையும் கேட்டார்கள். ஆனால் கடைசியில் என்னையே தேர்வு செய்து கன்னியாகுமரியில் ஷூட்டிங் தொடங்கினார்கள். 45 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடஸ்.ஏ.சி சார் என்னை அடித்தார். ஆனால் அது சீன் சரியாக வர வேண்டும் என்பதற்காக தான். சிவக்குமார் சார் என்னை அடிக்க வேண்டும். அவர் நடிப்புக்காக அடித்ததால் என்னால் அழ முடியவில்லை. இந்த காட்சி 3-4 டேக் போய்க்கிட்டே இருந்தது. அப்போது அங்கிருந்து வந்த எஸ்.ஏ.சி சார் டப்புனு அறைந்துவிட்டார். அதன்பிறகு கண்ணீர் வந்தவுடன் படமாக்கினார்கள். மறுநாள் என்னை வந்து சமாதானப்படுத்தினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கோபம் வந்துவிட்டால், யாரையும் பார்க்க மாட்டார். விஜய் கூட பலமுறை திட்டு வாங்கியுள்ளார். அஜித்துடன் படம் பண்ண ரெடியானபோது ஒரு ரிப்போர்ட்டர் அவருக்கு வெற்றிப்படம் இல்லை நடிக்க வேண்டாம் என்று சொன்னார். அதே சமயம் எனது முதல் படம் தேவா, ஹீரோவின் பெயர் ஆனால், இந்த படம் வான்மதி ஹீரோயின் பெயரில் வருகிறது, அதனால் எனக்கு கதையும் பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.
