இலங்கை
யாழில் நடுவீதியில் சாகசம் காட்டிய தண்ணீர் வண்டி ; நகர சபையின் அலட்சிய போக்கால் சம்பவம்
யாழில் நடுவீதியில் சாகசம் காட்டிய தண்ணீர் வண்டி ; நகர சபையின் அலட்சிய போக்கால் சம்பவம்
பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் நேற்று (27) காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி புறமாகவும் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான தண்ணீர் வண்டியானது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக புறப்பட்டது.
அந்த வண்டி பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதி வழியாக செல்லும் போது சக்கரம் முன்பாகவும் வண்டி புறமாகவும் சென்றுள்ளது.
அந்த நேரம் அந்த வீதி வழியாக மக்கள் பயணித்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
நகர சபையின் இவ்வாறான அலட்சிய போக்கை உடனடியாக நிறுத்தி அதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை நகர சபை தவிசாளர் எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர் .
