இலங்கை
10 ஆண்டுகளுக்கும் மேல் குளிர்சாதனப் பெட்டிகளைப் பாவிப்பதால் அதிக மின் செலவு!
10 ஆண்டுகளுக்கும் மேல் குளிர்சாதனப் பெட்டிகளைப் பாவிப்பதால் அதிக மின் செலவு!
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் எரிசக்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுகின்றது.
இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தக் கூடிய உரிய தரத்தில் இல்லை.
இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது.
அத்துடன் இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
