Connect with us

இலங்கை

அனுமதி அட்டைகளை அகற்ற முடியாது ; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Published

on

Loading

அனுமதி அட்டைகளை அகற்ற முடியாது ; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

வாகனங்களின் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தப்படும் சட்டத்தரணிகளுக்கான வாகன அனுமதி அட்டைகளை (Lawyers’ Car Passes) நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சத்துர கல்கேன ஆகியோர் இணைந்து இந்தக் கடிதத்தை அனுமதி அட்டைகளை நீக்குமாறு வலியுறுத்தும் எந்தவொரு முயற்சியும்,வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சட்டத்துக்கு முரணானது என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இந்த வாகன அனுமதி அட்டைகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் எந்தவொரு விதியையும் மீறவில்லை என்றும் BASL சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனுமதி அட்டைகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நீதித்துறை தொடர்பான ஏனைய நிறுவனங்களுக்குள் நுழையும்போது சட்டத்தரணிகளை அடையாளம் காண உதவுகின்றன.

அத்துடன், வளாகங்களுக்கான வாகன நுழைவை ஒழுங்குபடுத்துவதில் இது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகவும் செயல்படுகிறது.

Advertisement

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது, 1997 ஆம் ஆண்டு முதல் சுமார் 28 ஆண்டுகளாக இந்த வருடாந்த அனுமதி அட்டைகளை வழங்கிவருகிறது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்புத் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய மேலதிக அடையாள அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், இத்தகைய செய்திகள் வெளியாவது குறித்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

Advertisement

வாகன அனுமதி அட்டையின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றும், தற்போதைய நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன