Connect with us

இலங்கை

சர்ச்சையை கிளப்பிய கர்தினால் ; கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரே பாலினத் திருமணம்!

Published

on

Loading

சர்ச்சையை கிளப்பிய கர்தினால் ; கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரே பாலினத் திருமணம்!

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் ஒரே பாலினத் திருமணம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்த வார இறுதியில் வெளியிட்ட தகவல், கத்தோலிக்க சமூகம் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின்போது உரையாற்றிய கர்தினால், இரண்டு இலங்கை பெண்கள் திருமணத்தை நடத்தும் அருட்தந்தையை ஏமாற்றி தேவாலயத்தில் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார்.

Advertisement

“இந்த பெண்களில் ஒருவர் ஹோர்மோன் மாத்திரைகளை பயன்படுத்தி தனது தோற்றத்தை ஆண் போல மாற்றியிருந்தார். அவருக்கு முகத்தில் உரோமங்கள் இருந்ததால் மதகுரு ஏமாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் இலங்கையிலேயே நடந்தது,” என்று கர்தினால் தெரிவித்தார்.

இதனிடையே, ஒரே பாலினத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட கர்தினால், “இரண்டு ஆண்களோ அல்லது இரண்டு பெண்களோ திருமணம் செய்தால், அவர்களால் எவ்வாறு சரியான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், இலங்கையில் LGBTQ+ சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் விமர்சித்த அவர் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற வரும் வெளிநாட்டவர்களால் நமது இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Advertisement

அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்வார் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஒரே பாலின நாட்டமுள்ள நபர்களை கருணையுடன் நடத்த வேண்டும் என்றும், ஆனால் வெளிப்புற செல்வாக்கினால் வேறு வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்படக் கூடாது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன