இந்தியா
சினிமா உலகிலும் டிரம்ப் அதிரடி: வெளிநாட்டுப் படங்களுக்கு 100% சுங்கவரி விதிப்பு
சினிமா உலகிலும் டிரம்ப் அதிரடி: வெளிநாட்டுப் படங்களுக்கு 100% சுங்கவரி விதிப்பு
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரியை (Tariff) விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்நடவடிக்கை, ஹாலிவுட் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வணிகம் செய்யும் முறையையே தலைகீழாக மாற்றும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.டிரம்ப்பின் இந்தக் கொள்கை, அவரது வர்த்தக அணுகுமுறை இப்போது கலாச்சாரத் துறைகள் (Cultural Industries) மீதும் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் கூட்டுத் தயாரிப்புகள் மூலமாக ஈட்டும் திரைப்பட ஸ்டுடியோக்களுக்கு இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கடிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் குறிப்பிட்டதாவது, “குழந்தையிடம் இருந்து மிட்டாயைத் திருடுவதுபோல, நம் திரைப்படம் தயாரிக்கும் வணிகம் மற்ற நாடுகளால் அமெரிக்காவிலிருந்து திருடப்பட்டுவிட்டது.”எந்தச் சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த சுங்கவரிகளைக் கொண்டு வருவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் கேள்விக்கு வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, காம்காஸ்ட், பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களும் பதிலளிக்கவில்லை. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் 1.5% சரிந்தன.திரைப்படங்களுக்கான சுங்கவரி பற்றி டிரம்ப் முதல்முறையாக மே மாதமே பேசியிருந்தாலும், அப்போது அவர் எந்த விவரங்களையும் அளிக்க வில்லை. இதனால், இந்தச் சட்டம் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமா அல்லது அனைத்து இறக்குமதிகளுக்கும் பொருந்துமா என்பதில் திரைப்படத் துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஸ்டுடியோ நிர்வாகிகள், “இன்றைய படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு நாடுகள் மற்றும் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டு, எடிட்டிங் செய்யப்படுவதால், இத்தகைய விதி எப்படிச் செயல்பட முடியும் என்று புரியாமல் திகைப்பில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.திரைப்படங்கள் ஒருவகை அறிவுசார் சொத்து (Intellectual Property) என்றும், பொதுவாகச் சேவைத்துறையின் கீழ் வரும் உலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும் என்றும் சட்ட மற்றும் வர்த்தக வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சேவைத் துறையில் அமெரிக்கா எப்போதும் உபரியை (Surplus) ஈட்டுவதால், சுங்கவரிகளை விதிப்பதற்கான சட்ட அடிப்படை தெளிவாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்தச் சுங்கவரிகள் விதிக்கப்பட்டால், வெளிநாட்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து செய்யப்படும் கூட்டுத் தயாரிப்புகள் (Co-productions) எவ்வாறு கருதப்படும் என்பதும் ஒரு கவலையாக உள்ளது.
