இலங்கை
நடுகடலில் மூழ்கிய படகு ; மாயமான மீனவர்
நடுகடலில் மூழ்கிய படகு ; மாயமான மீனவர்
மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு ஒன்று மூழ்கியதில் மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (29) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த படகில் இரு மீனவர்கள் சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காணாமல் போன நிலையில், மற்றொரு மீனவர் மிதக்கும் கலனின் உதவியுடன் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர் 38 வயதுடையவர் நபர் என்றும், மூன்று பிள்ளைகளின் தகப்பனான இவர் தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
