பொழுதுபோக்கு
பாலா ஒரு கொசு மாதிரி, மிர்ச்சில எங்களை நிறைய ஏமாற்றி இருக்காங்க: பாடகி சுசித்ரா ஓபன் டாக்!
பாலா ஒரு கொசு மாதிரி, மிர்ச்சில எங்களை நிறைய ஏமாற்றி இருக்காங்க: பாடகி சுசித்ரா ஓபன் டாக்!
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்தனர். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பாலா, புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் பாலா நடிப்பில் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு புறம் பாலா தனது திறமையினால் முன்னேறி வந்தாலும் மறுபுறம் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். பாலாவிற்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது. அதனால் தான் அவர் உதவி செய்கிறார். அவர் ஒரு சர்வதேச கைக்கூலி என்று பல விமர்சனங்கள் எழுந்தது.இதற்கு பதிலடி கொடுத்து பாலா வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பாலா குறித்து பாடகி சுசித்ரா மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நான் பாலா வீடியோ எல்லாம் பார்த்துவிட்டு உண்மையான மக்களுக்கு உதவி கிடைக்கும் என்று நினைத்தேன். மிர்ச்சியில் வேலை செய்யும் பொழுது நிறைய ஏமாந்து இருக்கிறோம். நமக்கு தினமும் எவ்வளவு போலி செய்திகள் வரும்.இதயத்தில் ஓட்டை இருக்கிறது உதவுகள் என்று இஷ்டத்திற்கு போலி செய்திகள் வரும். நாம் நன்கொடை செய்பவர்களா, செய்யாதவர்களா என்று தெரியாமலேயே பல செய்திகள் வரும். பாலா அமெரிக்காவிற்கு எதாவது நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம். அங்கு ஒரு பத்து தொழிலளிதிபர்களுடன் கைக்கோர்த்திருக்கலாம். அவரால் தனியாக என்ன செய்ய முடியும். கொசு மாதிரி இருக்கிறார். அவரால் என்ன செய்ய முடியும்” என்றார்.பாடகி சுசித்ரா சமீப காலமாகவே சமூகம் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், திரைப்பிரபலங்கள் உட்பட பலரையும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
