வணிகம்
ரிஸ்க் இல்லை; வருமானம் அதிகம்… 7.5% வட்டி, வரிச் சலுகையுடன் போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் செக் பண்ணுங்க!
ரிஸ்க் இல்லை; வருமானம் அதிகம்… 7.5% வட்டி, வரிச் சலுகையுடன் போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் செக் பண்ணுங்க!
தபால் அலுவலகத்தின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், தபால் அலுவலக கால வைப்பு நிதி (Post Office Time Deposit – TD) திட்டம் மிக கவனிக்கத்தக்கது. இது, வங்கிகளின் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit – FD) போலவே செயல்படுகிறது. நீங்க ஒரு தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டியைப் பெறலாம். குறைவான ரிஸ்க் உள்ள முதலீடுகளை விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டமாகும்.தபால் அலுவலக TD திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1, 2, 3, அல்லது 5 ஆண்டுகள் என்ற காலத்தைத் தேர்வு செய்யலாம். வட்டி காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டாலும், அது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். இத்திட்டத்தில், 5 வருட காலத் திட்டம் அதிக வருமானத்தைக் கொடுப்பது உடன் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-இன் கீழ் வரிச் சலுகையும் பெறுவதால், இது மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது.5 வருட TD திட்டத்தின் தனிச்சிறப்பு, இதில் கிடைக்கும் கூட்டு வட்டி (Compound Interest) நன்மை ஆகும். இது உங்கள் முதலீட்டை காலப்போக்கில் விரைவாக வளர உதவுகிறது. உதாரணமாக, 5 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டியில் முதலீடு செய்தால், அது சுமார் ₹7.21 லட்சம் ஆக உயரும். அதே தொகையை (ரூ.7.21 லட்சம்) மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதே வட்டியில் (7.5%) முதலீடு செய்தால், மொத்தமாக 10 வருட முடிவில் அது சுமார் ரூ.10.40 லட்சம் ஆக உயரும். அதாவது, ஒருமுறை மட்டும் மறுமுதலீடு செய்வதன் மூலம், உங்க ஆரம்ப முதலீட்டை (ரூ.5 லட்சம்) 10 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து இரட்டிப்பாக உயர்த்த முடியும்.மற்ற நன்மைகள்அரசு உத்தரவாதம்: இத்திட்டம் இந்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.குறைந்த ரிஸ்க்: வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளை விடவும் சிறந்த வருமானத்தை இது வழங்குகிறது.மூத்த குடிமக்களுக்கு நன்மை: ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கிடைப்பதால், மூத்த குடிமக்களுக்கு இது நிலையான வருமான ஆதாரமாகவும் அமைகிறது. குறைந்தபட்ச ரிஸ்க் மற்றும் அரசு உத்தரவாதத்துடன், 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாகப் பெருக்கும் இந்தத் தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டம், மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது.
