பொழுதுபோக்கு
வாயுத் தொல்லையை விரட்டும் இந்த சாதம்… திரும்ப திரும்ப செய்யத் தூண்டும்; சிம்பிள் ஸ்டெப்ஸ்!
வாயுத் தொல்லையை விரட்டும் இந்த சாதம்… திரும்ப திரும்ப செய்யத் தூண்டும்; சிம்பிள் ஸ்டெப்ஸ்!
பூண்டு சாதம் என்பது லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற, மிகவும் சுலபமான, விரைவாகச் செய்யக்கூடிய ஒரு ரெசிபி ஆகும். இதைச் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றிப் பார்ப்போம்.தேவையான பொருட்கள்சாதம்1 கப் பூண்டு 15 பற்கள் சீரகம்அரை டீஸ்பூன்மிளகுஅரை டீஸ்பூன்வெங்காயம் 1 சின்ன சைஸ் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்நெய் 2 டேபிள்ஸ்பூன் கடுகு சிறிதளவுஉளுந்தம் பருப்பு சிறிதளவுவேர்க்கடலை சிறிதளவு காய்ந்த மிளகாய்2கறிவேப்பிலை ஒரு கொத்துபெருங்காயத்தூள் சிறிதளவுஉப்பு தேவையான அளவுகொத்தமல்லி இலைசெய்முறை: முதலில், எடுத்து வைத்துள்ள பூண்டுப் பற்களை மிகச் சின்னதாக நறுக்கிக் அல்லது இடித்து வைத்துக் கொள்ளலாம். சீரகம் மற்றும் மிளகை எடுத்து, இரண்டையும் நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நான்-ஸ்டிக் பானில் 2 எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், வேர்க்கடலை, இரண்டு காய்ந்த மிளகாய், மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை கிளறவும்.இப்போது, நாம் இடித்து வைத்திருக்கும் பூண்டை உள்ளே சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பூண்டு கருகாமல் பார்த்துக் கொள்ளவும். பூண்டு லேசாக பொன்னிறமானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.பூண்டு நல்ல கோல்டன் பிரவுன் நிறமாக மாறியதும், நாம் இடித்து வைத்திருக்கும் சீரகம் மற்றும் மிளகுப் பொடியைச் சேர்க்கவும்.அடுத்து, சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் சாதத்திற்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும்.இப்போது, சமைத்து ஆற வைத்திருக்கும் சாதத்தை உள்ளே சேர்க்கவும்.கூடவே, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் கடைசியாக, இன்னும் நல்ல மணத்திற்காக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளவும். தீயை சற்று அதிகமாக்கி, சாதம் மற்றும் மசாலா அனைத்தும் நன்றாகக் கலந்து வரும்படி மெதுவாக மிக்ஸ் செய்யவும். அவ்வளவுதான்! உங்கள் மணமிக்க, சுவையான பூண்டு சாதம் தயார்.
