Connect with us

பொழுதுபோக்கு

அமைதிப்படை பின்னணி இசை, திணறிய மகனுக்கு உதவிய இளையராஜா: அப்போ படத்துக்கு இசை இவர் இல்லையா?

Published

on

karthik

Loading

அமைதிப்படை பின்னணி இசை, திணறிய மகனுக்கு உதவிய இளையராஜா: அப்போ படத்துக்கு இசை இவர் இல்லையா?

இசைஞானி இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா தன் தந்தை போன்றே தனது இசையால் சினிமாத் துறையில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.’மாணிக்கம்’, ‘உல்லாசம்’, ‘டும் டும் டும்’, ’நெறஞ்ச மனசு’, ’நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், சத்யராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “அமைதிப்படை திரைப்படத்தின் ரீ ரெக்கார்டிங் நான் தான் செய்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கதாபாத்திரத்தை எரிக்கிறார்கள். அதுக்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அப்போது அப்பா இளையராஜாவிற்கு கால் பண்ணி என்ன செய்வது என்று தெரியவில்லை என்றேன்.அவர் நான் உணவு இடைவேளையில் வருகிறேன் என்று கூறினார்.பின்னர் வந்து ஒரு நான்கு கார்டு கொடுத்தார். எல்லாம் சரியாகிவிட்டது” என்றார். கடன் 1994-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’அமைதிப்படை’. இந்த படத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தில் சத்யராஜ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். மணிவண்ணன் இயக்கிய படங்களில் இதுவும் ஒரு முக்கியமான திரைப்படமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன