இந்தியா
இஸ்ரேல்-காசா போர்; முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டம்: டிரம்ப் வெளியீடு
இஸ்ரேல்-காசா போர்; முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டம்: டிரம்ப் வெளியீடு
இஸ்ரேல் – காசா இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசாவைச் சேர்ந்த 66,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில், காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 20 அம்ச திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 1. காசா அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாறும்.2. காசா மக்கள் போதுமான அளவு துன்பப்பட்டுள்ளதால், அவர்களின் நலனுக்காக காசா மீண்டும் மேம்படுத்தப்படும்.3. இரு தரப்பினரும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். பிணைக்கைதிகள் விடுவிப்பிற்காக இஸ்ரேலியப் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில், அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும். மேலும், முழுமையான திட்டமிடப்பட்ட விலகல் நடக்கும்வரை போர் எல்லைகள் முடக்கப்பட்டிருக்கும்.4. இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட 72 மணி நேரத்திற்குள், உயிருடன் மற்றும் இறந்த நிலையில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளும் திருப்பி ஒப்படைக்கப்படுவார்கள்.5. அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனைக் கைதிகளையும், அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்ட 1,700 காசா மக்களையும் விடுவிக்கும். இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இறந்த ஒவ்வொரு இஸ்ரேலிய பிணைக்கைதியின் உடல்கள் விடுவிக்கப்படும்போதும், அதற்கு ஈடாக இறந்த 15 காசா மக்களின் உடல்களை இஸ்ரேல் விடுவிக்கும்.6. அனைத்து பிணைக்கைதிகளும் திருப்பி ஒப்படைக்கப்பட்ட பிறகு, அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்து, தங்கள் ஆயுதங்களை கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும். காசாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்குப் பாதுகாப்பான பயணம் வழங்கப்படும்.7. இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், காசா பகுதிக்கு முழுமையான உதவி உடனடியாக அனுப்பப்படும். மனிதாபிமான உதவி தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்த அளவிற்கு உதவிகள் இருக்கும். இதில், உள்கட்டமைப்பை புனரமைத்தல், மருத்துவமனைகள் மற்றும் இடிபாடுகளை அகற்றி சாலைகளை பயன்படுத்த தேவையான உபகரணங்கள் அனுப்புதல் ஆகியவை அடங்கும்.8. இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் உட்பட 20 அம்ச திட்டத்தை அதிபர் டொனாட் டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்க
