இலங்கை
உயர்தரத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; ஒரே பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பம்
உயர்தரத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; ஒரே பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பம்
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும் சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
