Connect with us

இலங்கை

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

Published

on

Loading

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை.
இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை.

Advertisement

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது.

அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகம், காத்தான்குடி நகர பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்றுவரை இஸ்லாமிய மத அடைப்படைவாதிகளுக்கு பயந்தே நிர்வாகம் செய்து வருகின்றனர்.

Advertisement

கடந்த காலங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்ததற்காக அது இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிரானது என கூறி இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று அப்போதிருந்த பிரதேச செயலாளரை கடுமையாக அச்சுறுத்தியதோடு பிரதேச செயலக பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நடாத்தியிருந்தனர்.

அன்றில் இருந்து இன்று வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலாவது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்போடுபிரதேச செயலாளரிடம் அனுமதி கோரிய தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழமை போல் இம்முறையும் அனுமதி கிடைக்கவில்லை.

Advertisement

அரச திணைக்களங்கள் என்பது அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படும் திணைக்களங்களாகும்.

இவ்வாறு இருக்கையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் போன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பயந்து இன்றும் முஸ்லீம் பகுதிகளில் உள்ள பல திணைகள தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.

Advertisement

அனுர அரசு என்னதான் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக கூறினாலும் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்கள தலைவர்களுக்கு இன்றுவரை சில மதவாத அடைப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை மீறி செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன