சினிமா
செந்தில் பாலாஜி காரணம்; கரூர் துயரத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகி
செந்தில் பாலாஜி காரணம்; கரூர் துயரத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகி
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை நிர்வாகியான ஐயப்பன் என்பவர் நேற்று மாலை தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் உயிரிழந்த இடத்தில் கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டு உள்ளனர். அவர் எழுதி உள்ள கடிதத்தில், இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி தான்.கரூரில் உயிரிழந்தோரின் துயரம் தாங்க முடியவில்லை. இந்த பேரழிவில் எதையும் செய்ய முடியாமல் போனது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம். போலீசும் இதற்கு உடனடியாக இருந்தார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
