பொழுதுபோக்கு
நம்ம கதை இங்க வேணாம், அவரை பற்றி பேசு; மேடையில் தம்பியை கண்டித்த இளையராஜா!
நம்ம கதை இங்க வேணாம், அவரை பற்றி பேசு; மேடையில் தம்பியை கண்டித்த இளையராஜா!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. 5 தேசிய விருதுகளை வென்ற மாமேதை அவர். இந்திய மொழிகள் பலவற்றுள் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.தமிழில் இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வெளியாகி இருந்தாலும், இசை ஞானி இளையராஜா தான் அவர்களில் எப்பொழுதும் டாப் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. 1976-ம் ஆண்டு வெளியான “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா.இவருடைய குடும்பத்தை பொறுத்தவரை தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, மகள் மறைந்த பாடகி பவதாரணி, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா என்று அனைவருமே இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைக்கனம் கொண்டவர் இளையராஜா என்று பலரும் கூறுகின்ற வேளையில், இவ்வளவு திறமையோடு உள்ள ஒரு மனிதன் கொஞ்சம் தலைகனத்தோடு இருந்தால் தான் என்ன தப்பு என்பது தான் அவருடைய ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு பாடலுக்கும் தன்னுடைய ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை கொடுத்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இளையராஜா.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா மேடையில் தன் சகோதரர் கங்கை அமரனை கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பேசிய கங்கை அமரன், வாழ்க்கை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன், கோயம்புத்தூரில் ஒர் அர்மோனியம் வாங்கினார்.அந்த அர்மோனியத்தை வேறு ஒருவர் வாசித்துக் கொண்டிருந்த போது இளையராஜா தெரியாமல் எடுத்து வாசித்தார். இளையராஜாவிடம் நான் சொல்வேன் அந்த அர்மோனியம் கிடைக்காமல் இருந்திருந்தால் நம் நிலைமை என்ன ஆகியிருக்கும். ஏனென்றால் எங்கள் ஊரில் வேறு அர்மோனியம் வாங்குவதற்கு சர்தர்ப்பம் இல்லை. அந்த அர்மோனியம் என்பது இன்று வரை இளையராஜாவுடன் இருக்கும் ஒன்று. இந்த வாழ்வு அந்த அர்மோனியத்தால் தான் கிடைத்தது. அந்த அர்மோனியம் கிடைத்ததால் தான் இயக்குநர் பாரதிராஜா கிடைத்தார் என்று கங்கை அமரன் தெரிவித்தார். இதை கேட்ட இளையராஜா அந்த அர்மோனியம் அதற்கு முன்பு யாரிடம் இருந்து என்று கேட்டார். பின்பு இங்கு வந்து நம்ம கதைகளை பேசக்கூடாது. பஞ்சு அருணாச்சலத்தை பற்றி பேசு என்றார்.
