Connect with us

இலங்கை

நாமல் எனது பெற்றோர் போன்றவர்! அர்ச்சுனா தெரிவிப்பு

Published

on

Loading

நாமல் எனது பெற்றோர் போன்றவர்! அர்ச்சுனா தெரிவிப்பு

எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுவதாவும் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

 பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன்.

ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர். 

Advertisement

 மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் தலைவர் அல்லர், ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன்.

 முழு நாடும் அதை நம்பியது.

Advertisement

ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்.

இன்று எனக்கு பெற்றோர் இல்லை. 

images/content-image/1759201493.jpg

எனவே, என் பெற்றோருக்குப் பதிலாக என் சகோதரி மற்றும் நாமல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

Advertisement

எனவே, நாமல் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர் மீது வழக்குத் தொடருங்கள். ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளாதீர்கள். 

 பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வி எழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்குத் தெரியும். என்னைப் பைத்தியம் என்று கூறுவதால் எனக்குக் கவலையில்லை என்றார்.

Advertisement

 அப்போது ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அர்ச்சுனாவைப் பார்க்க வந்ததாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் வேலை செய்ய முடியாததால், அற்ப காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு என்றும் கூறினார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன