பொழுதுபோக்கு
நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பாருங்க; பெண்களை தொட்டு பேசினாலும்… புகழுக்கு ஆதரவாக வந்த மனைவி
நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பாருங்க; பெண்களை தொட்டு பேசினாலும்… புகழுக்கு ஆதரவாக வந்த மனைவி
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதில், புகழ், குரேஷி, ராமர், செளந்தர்யா, சுனிதா, சர்ஜின், டாலி, தங்க துரை உட்பட பலர் கோமாளிகளாக நடித்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில், புகழ் மற்றும் குரோஷி மிகவும் கவனிக்கப்படும் கோமாளிகளாக வலம் வருகின்றனர். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிந்து ஆறாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்களிடம் நடிகர் புகழ் ஜாலியாக விளையாடுவார்.இது ஆரம்பத்தில் சிரிப்பை ஏற்படுத்தினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பல விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அதாவது, நடிகர் புகழ் பென்ஸியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனால், அவர் நிகழ்ச்சியில் பெண்களை காதலிப்பது போல் காமெடியாக நடிப்பது எதிர்மறை விமர்சனங்களை பெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ‘குக் வித் கோமாளி’ ஆறாவது சீசனின் ஃபைனல் நடைபெற்றது. அதில், நடிகர் ராஜு டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். நடிகை சபானா ரன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில், நடிகர் புகழின் மனைவி பென்ஸியா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், புகழ் பெண்களை தொட்டி பேசுகிறார் என்கிற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். அதாவது, எனது கணவர் புகழ், பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தான் அதிகம் வருகிறது. ஒரு நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்க்க வேண்டும், அப்படியே, அவர் பெண்களை தொட்டி பேசினாலும், பிரச்சனை என்பது யாருக்கு என்றால் எனக்கும், சம்மந்தப்பட்ட பெண்ணுக்கும் தான். என் கணவர் பற்றி எனக்கு நன்றாக தெரியும். தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு ஆணிடமும் ஒரு பெண் நட்பாக பழக மாட்டாள். அப்படி இருக்கும் போது முதல் சீசன் முதல் இப்போது வரை இவருடன் பழகிய அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக உள்ளார்கள். இதை வைத்து பார்த்தால் ஒரு ஆணின் குணம் எப்படி என்று தெரியும் என்று கூறினார்.
