இலங்கை
பருத்தித்துறை பிரதேசசபையில் தவிசாளர் மீது குற்றச்சாட்டு; உறுப்பினர்கள் வெளிநடப்பு!
பருத்தித்துறை பிரதேசசபையில் தவிசாளர் மீது குற்றச்சாட்டு; உறுப்பினர்கள் வெளிநடப்பு!
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டி 50 வீதமான உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்புச் செய்துள்ளனர். பருத்தித்துறைபிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, கடந்த மாதத்தின் கூட்ட அறிக்கையில் தாம் சுட்டிக்காட்டிய விடயங்கள் இடம்பெறவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். எனினும், அந்த மாற்றங்களைச் செய்வதற்கு தவிசாளர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்தே, தவிசாளர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டி ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவைச் (அணில்) சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் என 10 பேர் வெளிநடப்புச் செய்தனர். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த ஒருவருமாக 10 பேர் சபையில் இருந்தனர்.
