இந்தியா
புதுச்சேரி பல்கலை. -யில் பாலியல் சீண்டல்: காரைக்கால் காங்கிரசார் முற்றுகை போராட்டம்
புதுச்சேரி பல்கலை. -யில் பாலியல் சீண்டல்: காரைக்கால் காங்கிரசார் முற்றுகை போராட்டம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் சீண்டல் விவகாரத்தைக் கண்டித்து காரைக்கால் காங்கிரஸார் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இன்று காலை 10 மணியளவில், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளைக்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரைக் கண்டித்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் விடுத்த முக்கிய கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:- காரைக்கால் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு வாரத்திற்கு முன்பு புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் இதுவரை அந்தக் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதுச்சேரி பல்கலை. -யில் பாலியல் சீண்டல்: காரைக்கால் காங்கிரசார் முற்றுகை போராட்டம்#puducherry#harassmentpic.twitter.com/s22GjVxcEDமாணவிக்கு ஏற்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குறித்து உயர்மட்ட குழு (High-Level Committee) அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று அவர் விமர்சித்தார். எனவே, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து, உண்மைத்தன்மையை கண்டறிய உயர்மட்ட குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் இந்தக் கண்டனப் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தினார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
