இலங்கை
பொலநறுவையில் குரங்கால் பரவும் நோய்!
பொலநறுவையில் குரங்கால் பரவும் நோய்!
பொலநறுவை மற்றும் கிரித்தலை ஆகிய பகுதிகளில் குரங்குகளால் சமூகநோய் ஒன்று பரவுகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரத்தை அண்மித்த பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் உலாவுவதால் மனிதர்களிடையே இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளை இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
