இலங்கை
யாழில் மீள திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்
யாழில் மீள திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்
யாழ்ப்பாணம் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மீள திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொருளாதார மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.
நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர்.
