இலங்கை
323 கொள்கலன்கள் விடுவிப்பு அரசாங்கத்தின் பெரும் மோசடி; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
323 கொள்கலன்கள் விடுவிப்பு அரசாங்கத்தின் பெரும் மோசடி; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
சுங்கத்தில் இருந்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை பெரும் மோசடியாகும். இதன் உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இன்று வரை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கோப்குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைவாக, இதுவரையில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அரசாங்கமே பொறுப் புக்கூறவேண்டும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் நான்கு பரிந்துரைகளும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை. கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடியில் நாட்டுக்குத் தரமற்ற மருந்துகளும், ஆயுதங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை- என்றார்.
