Connect with us

சினிமா

அடுத்த சாதனைக்குத் தயாராகும் அஜித்.. – ரேஸிங் டிராக்கில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவாரா?

Published

on

Loading

அடுத்த சாதனைக்குத் தயாராகும் அஜித்.. – ரேஸிங் டிராக்கில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற பைக் மற்றும் கார் ரேசிங் பிரியருமாக மக்கள் மனதைக் கவர்ந்தவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது தனது அற்புதமான கார் பந்தய பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றார். சமீபத்திய தகவல்களின் படி, அஜித் மற்றும் அவரது ரேசிங் அணி, 2025-26ஆம் ஆண்டுக்கான Asian Le Mans Series பந்தயத்துக்காக தீவிரமாக தயார் நிலையில் உள்ளனர்.இந்த பரபரப்பான பந்தயம், மலேசியா மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ளதுடன், 2025 டிசம்பரில் துவங்கி, 2026 பிப்ரவரி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அஜித் குமார் திரை உலகத்துக்கு அப்பால் ரேசிங் வீரராகவும் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.அஜித், கடந்த நாட்களாகவே பைக் மற்றும் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பர்ஸனல் பாஷனாக தொடங்கிய ரேசிங், இன்று பிரபலமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.அத்துடன் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற ரேசிங் சாம்பியன்ஷிப்பில், அஜித் மற்றும் அவரது அணி பங்கேற்றது. இந்த போட்டியில் அஜித் அவர்கள் தன்னுடைய அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து மூன்றாவது இடம் பிடித்து, சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன