பொழுதுபோக்கு
இருக்குறத விட்டு பறக்க ஆசை பட கூடாது… இட்லி கடை ஒன்லைன்; பப்ளிக் ரிவ்யூ
இருக்குறத விட்டு பறக்க ஆசை பட கூடாது… இட்லி கடை ஒன்லைன்; பப்ளிக் ரிவ்யூ
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். 52 படங்கள் நடித்துள்ள தனுஷ், ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது ‘இட்லி’ கடை படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய் , சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘இட்லிகடை’ திரைப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘இட்லி கடை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதலாவதாக பேசிய நபர், தனுஷின் திரைக்கதை இயக்கம் நன்றாக இருந்தது. கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை அவர்கள் பேசினார்கள். இருக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டும். பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது என்பது தான் படத்தின் கதை என்றார்.தொடர்ந்து பேசிய மற்றொருவர், கதைக்களம் என்று பார்த்தல் பழைய கதைக்களம் தான். ஆனால், அது இப்போதுள்ள தலைமுறைக்கு பொருந்துமா என்று கேட்டால் கண்டிப்பாக பொருந்தும். நம் எந்த இடத்திற்கு சென்றாலும் நம் ஊரை மறக்க கூடாது என்று சொல்வார்கள். அதற்கு இந்த படம் பொருந்தும். அருண் விஜய் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது என்றார்.ரசிகர் ஒருவர் கூறுகையில், தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தது. ‘இட்லி கடை’ திரைப்படம் பீல் குட் மூவியாக இருந்தது. இசை சூப்பராக இருந்தது. பாடல் எல்லாம் செமயாக இருந்தது. ‘இட்லி கடை’ திரைப்படம் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றார்.மலேசியாவில் இருந்து வந்த ரசிகை பேசியபோது, தனுஷ் படம் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து வந்தோம். படம் மிகவும் அருமையாக இருந்தது. எல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்றார்.ஒரு பெண்மணி கூறும்போது, ’இட்லி கடை’ திரைப்படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் செட்டாகவில்லை. அவர் அஜித்திற்கு மட்டும் தான் வில்லனாக நடிக்க சூட் ஆவார். படம் ரொம்ப நன்றாக இருந்தது. குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய திரைப்படம் என்றார்.
