Connect with us

சினிமா

சக்தி ஆதியின் தம்பி இல்லையா? பெரிய ட்விஸ்டுகளுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

Published

on

Loading

சக்தி ஆதியின் தம்பி இல்லையா? பெரிய ட்விஸ்டுகளுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

“எதிர்நீச்சல் தொடர்கிறது” சீரியலில் தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்பதைத் தவிர, சக்தி வீட்டில் ஆதாரங்களை தேடி சென்ற போது பல உண்மைகளை கண்டறிகிறார். அவை என்னவென்று விரிவாக பார்ப்போம். சுமார் 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட லெட்டர் ஒன்று சக்தியிடம் சிக்குகிறது.  அதை படிக்கும் சக்திக்கு தூக்கி வாரி போடுகிறது. அப்படி அந்த லெட்டரில் என்ன இருந்தது என்று சொல்லப்படவில்லை. ஆனாலும் பல வருடங்களாக ஆதி குணசேகரன் மூடி மறைத்த உண்மை ஒன்று அதில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த தகவலை சக்தி கதிர் மற்றும் ஞானத்திடம் பகிர்கிறார். இதனால் அவர்களும் ஆதி குணசேகரனை எதிர்க்க வாய்ப்பு உள்ளது.அந்த லெட்டரில் ஆதி குணசேகரின் தம்பி சக்தி இல்லை என்பது தெரிய வந்திருக்கலாம். சக்தியின் தந்தை மிகப்பெரிய பணக்காரராக இருந்திருக்க கூடும். அவரின் சொத்துக்களை ஆதி குணசேகரன் அனுபவித்து வரும் விஷயம் சக்திக்கு தெரிந்திருக்கலாம்.  இதனால் இந்த சொத்து மேட்டர் தொடர்பில்  ஆதி குணசேகரனின் முகத்திரையை சக்தி கிளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பார்கவி போன்றோர் லாரி ஏற்றி கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு என்ன ஆனது? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் முடிந்தது? ஈஸ்வரியின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கும் விரைவில் பதிலளிக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன