இலங்கை
பிரசன்ன ரணவீரவுக்கு நிபந்தனையுடன் பிணை!
பிரசன்ன ரணவீரவுக்கு நிபந்தனையுடன் பிணை!
அரசுக்குச் சொந்தமான காணியைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனைசெய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கடுமையான பிணை நிபந்தனைகளின்கீழ் பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எட்டு இலட்சம் ரூபா வீதம் ஒரு ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் ஐந்து சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
