இலங்கை
வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை விபரம் வெளியானது!
வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை விபரம் வெளியானது!
இலங்கை மத்திய வங்கியால் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 2025க்கான வெளித்துறை செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரே மாதத்தில் வாகன இறக்குமதிக்கான அதிகபட்ச செலவு ஆகஸ்ட் 2025 இல் பதிவாகியுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக இதுவரை செய்யப்பட்ட செலவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி – 29.1
பிப்ரவரி – 22.3
மார்ச் – 54.0
ஏப்ரல் – 145.6
மே – 125.2
ஜூன் – 169.6
ஜூலை – 206.0
ஆகஸ்ட் – 255.7
லங்கா4 (Lanka4)
அனுசரணை
