Connect with us

இலங்கை

ஸ்ரீமத் இராமாயணம் குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு ; துயரத்தில் ரசிகர்கள்

Published

on

Loading

ஸ்ரீமத் இராமாயணம் குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு ; துயரத்தில் ரசிகர்கள்

  இந்திய தொலைக்காட்சியில் ஸ்ரீமத் இராமாயணம் இந்தி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார்.

Advertisement

சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார்.

 தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறிச் சுயநினைவை இழந்தனர்.

வீட்டின் அறையிலிருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்ததாக கூறப்படும் நிலையில் குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா உயிரிழந்த சம்பவம் 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன