Connect with us

பொழுதுபோக்கு

Idli Kadai OTT release: ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த தனுஷின் இட்லி கடை… ஓ.டி.டி ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

Published

on

idlikadai

Loading

Idli Kadai OTT release: ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த தனுஷின் இட்லி கடை… ஓ.டி.டி ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இட்லிகடை’.  இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளார். மேலும், அருண் விஜய் , சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இட்லிகடை’ திரைப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘இட்லி கடை’ திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அன்பான பெற்றோர், குரூரமான வில்லன், பள்ளிப் பருவக் காதல், நேர்மையற்ற போலீஸ் போன்ற தமிழ் சினிமாவுக்கே உரித்தான கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் காணலாம்.’இட்லிகடை’ திரைப்படம் வெளியான முதல் நாளே இப்படம் ஓ.டி.டி-யில் எப்போது வருன் என்று ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இட்லி கடை’ திரைப்படம் நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரத்திற்கு பிறகு ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக  ‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர். முதலாவதாக பேசிய நபர், தனுஷின் திரைக்கதை இயக்கம் நன்றாக இருந்தது. கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை அவர்கள் பேசினார்கள். இருக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டும். பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது என்பது தான் படத்தின் கதை என்றார்.தொடர்ந்து பேசிய மற்றொருவர், கதைக்களம் என்று பார்த்தல் பழைய கதைக்களம் தான். ஆனால், அது இப்போதுள்ள தலைமுறைக்கு பொருந்துமா என்று கேட்டால் கண்டிப்பாக பொருந்தும். நம் எந்த இடத்திற்கு சென்றாலும் நம் ஊரை மறக்க கூடாது என்று சொல்வார்கள். அதற்கு இந்த படம் பொருந்தும். அருண் விஜய் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன