இலங்கை
உற்பத்தி வீழ்ச்சியாலேயே சம்பா அரிசி விலையுயர்வு!
உற்பத்தி வீழ்ச்சியாலேயே சம்பா அரிசி விலையுயர்வு!
நாட்டில் 160 ஆயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன்காரணமாகவே சம்பா அரிசி விலை அதிகரித்துச் செல்கின்றது என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட வர்த்தக சங்கப் பிரதி நிதிகளுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டச்செயலர் அலுவலகத்தில் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறுங்காலத் தேவையை நிறைவு செய்யும் வகையில் கீரிச்சம்பா அரிசியை இறக்குமதி செய்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கவும், தொடர்ந்து அதன் உற்பத்தி அளவை அதிகரிப்பதே நோக்கமாகும். ஜனாதிபதி நாட்டுக்குத் திரும்பியவுடன் 40 ஆயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசியை இறக்குமதி செய்யும் அனுமதியைப் பெற்றுத் தருவோம். நெல் விளைச்சல் அதிகமாகவுள்ள பொலநறுவை, அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்படவுள்ளன. பொலநறுவையிலிருந்து கொள்வனவுசெய்யப்படும் கீரிச்சம்பா அரிசியை அங்கீகரிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்யவும் வழிவகுக்கப்படும் – என்றார்.
