இலங்கை
காலி சிறைச்சாலையில் தீ பரவல்
காலி சிறைச்சாலையில் தீ பரவல்
காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவல் இன்று (02) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் 02 தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலைஅறிந்து கொண்ட சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
