இலங்கை
செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வு; பட்ஜெட்டுக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை
செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வு; பட்ஜெட்டுக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை
தவணையிடப்பட்டது வழக்கு
அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரியாலை செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போதே, பட்ஜெட்டுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்ற விடயம் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, எதிர்வரும் 13ஆம் திக திக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
