இலங்கை
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர!!
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர!!
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
செப்ரெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டபல இருதரப்புக்கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
