இந்தியா
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இன்று வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் தொடர்ந்து 2 நாள் விடுமுறை வருகிறது. மேலும், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வேறு விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விடுமுறைக்கு வெளியூர் சென்ற மக்கள் ஊர் திரும்பும் வகையில் புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
