இலங்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை, எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதற்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாகப் பல கலந்துரையாடல்களைத் தாம் மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தற்போது 1,350 ரூபாயை தொழிலாளர்கள் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த கலந்துரையாடலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும், ஒரு மாத காலத்திற்குள் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
