இலங்கை
யாழில் மகாத்மா காந்தியின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!
யாழில் மகாத்மா காந்தியின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!
மகாத்மா காந்தியின் 156ஆவது ஜனனதினம் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அகிம்ஷாவாதியான மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ள யாழ். நகர்ப்பகுதியில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காந்தியின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூபியும் அஞ்சலி செய்யப்பட்டது. மேலும், காந்தியம் வருடாந்த பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் மாநகர சபை பிரதி முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
