இந்தியா
இந்தியாவின் ‘இழப்புகளை’ ஈடுசெய்யும் புடின்: அதிக வேளாண், மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா முடிவு
இந்தியாவின் ‘இழப்புகளை’ ஈடுசெய்யும் புடின்: அதிக வேளாண், மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா முடிவு
தெற்கு ரஷ்யாவில் நடைபெற்ற வால்டாய் விவாத மன்றத்தில் இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த புவியல்சார் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவையும் பிரதமர் மோடியும் பாராட்டினார். தொடர்ந்து, பேசிய அவர், ”இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எந்த பிரச்சனைகளும் இருந்ததில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை தனது நண்பர் என்று குறிப்பிட்ட புடின், அவருடன் கலந்துரையாடுவது நம்பகத் தன்மையுடன் இருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி அறிவாளியானவர் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை இந்தியா புறக்கணித்தது என்றும் கூறினார். அமெரிக்க வரிகளால் இந்தியாவில் ஏற்படும் இழப்புகளை ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமப்படுத்தப்படும். வர்த்தக ஏற்றத் தாழ்வை நீக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்று புடின் தெரிவித்தார்.ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்ய தடை விதிக்கும் படி இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தால் என்னவாகும் என ரஷ்ய அதிபர் புடினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . அதற்கு, “இந்திய எங்கள் எரிசக்தி இறக்குமதிக்கு மறுப்பு தெரிவித்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.இந்தியாவில் இருக்கும் மக்கள் என்னை நம்புகிறார்கள். அவர்கள் அரசியல் தலைவர்களின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தலைக்குனிவை ஏற்படுத்தும் முடிவை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து நான் நன்கு அறிவேன். இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளமாட்டார்” என்றார். இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இந்த கருத்து வந்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
