இலங்கை
உதவி என்ற போர்வையில் பெண்களின் மானத்தை சூறையாடும் சில டிக்டொக் வியாபாரிகள்!
உதவி என்ற போர்வையில் பெண்களின் மானத்தை சூறையாடும் சில டிக்டொக் வியாபாரிகள்!
நாட்டில் அதுவும் வடக்கு கிழக்கில் தற்பொழுது உதவி செய்யும் நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு பல தனிநபர்கள் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு சென்று அவர்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ளும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன .
குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமப் புறங்களில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி என்னும் பெயரில் அவர்களை இன்னும் சிக்கலில் மாட்டி விடும் செயற்பாட்டில் ஒரு சில டிக்டொக் பிரபலங்கள் களத்தில் இறங்கியள்ளனர்.
இவர்கள் குறிப்பாக இளம் பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளாக சென்று அவர்களுடைய விபரங்களை எடுத்து பொது வெளியில் பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன் அவர்களுடைய முகத்தை வீடியோவில் காட்டி காசு பெறும் முயற்சிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த செயற்பாட்டின் மூலம் அவர்கள் பல சிக்கல்களிற்கு முகம் கொடுக்கின்றனர். அவர்களுடைய வீட்டு விலாசத்தை பொது வெளிகளில் பகிர்ந்து அவர்களுக்கு மேலும் சிக்கல்களை கொடுக்கின்றனர்.
ஒருசிலர் தங்களுடைய பிரபலத்திற்காக இவர்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
ஆகவே தயவு செய்து இளம் பெண் பிள்ளைகள் இவர்கள் தரும் சொற்ப காசிற்காக உங்கள் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள். வறுமை மாறும் ஆனால் வறுமையால் ஏற்பட்ட வடு மாறாது என்பார்கள்..
இவர்களை நம்பி உங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்காதீர்கள்.
இப்படியானவர்கள் உதவி தர வந்தால் அவர்களின் வீடியோவிற்கு முன்னால் சென்று உங்கள் முகங்களை காட்டாதீர்கள்..வயதானவர்களோ அல்லது வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளை முன்னால் விடுங்கள்..
அல்லது உதவி தரும்போது வீடியோ எடுக்க வேண்டாம் என கூறுங்கள்.
அவர்களின் விடியோவிற்கு முகத்தை காட்டி உங்கள் எதிர்கால வாழ்க்கையை வீணாக்க முயற்சிக்காதீர்கள்.
இது லங்கா 4 ஊடகத்தின் ஒரு விழிப்புணர்வு பதிவு
லங்கா4 (Lanka4)
அனுசரணை
