பொழுதுபோக்கு
ஊரில் மாட்டு சாணம் அள்ளிய நடிகர்… இப்போது கோடிக்கணக்கான சொத்து; இவர் யார் தெரியுமா?
ஊரில் மாட்டு சாணம் அள்ளிய நடிகர்… இப்போது கோடிக்கணக்கான சொத்து; இவர் யார் தெரியுமா?
பாலிவுட் நடிகரான ஜெய்தீப் அஹ்லாவத் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மிகவும் திறமையான மற்றும் அதிக வெற்றிப் படங்களை கொடுத்த நடிகராவார். கிராமப்புறத்தில் இருந்து வந்த நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத்தின் சினிமாத் துறையின் வளர்ச்சி மிகப்பெரியது.தனது வளர்ச்சி குறித்து நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “சில நேரங்களில் நான் யோசிப்பேன் வாழ்க்கை எவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்திருக்கிறது என்று. கிராமப்புற வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது. அந்த வாழ்க்கை மிகவும் வித்தியாசமான வாழ்க்கை ஆனால் கடினமான வாழ்க்கை இல்லை.எங்களுக்கு உலகத்தை பற்றி கவலை இல்லை. உங்களை குறைச் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். கிராமப்புறத்தில் இருந்துவிட்டு மும்பைக்கு வந்து வாழ்வது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மாட்டு சாணம் எடுப்பதில் இருந்து ஆடம்பர ஓட்டலில் வேலை பார்ப்பது முதல் அனைத்து வேலைகளையும் நான் பார்த்துள்ளேன். இந்த பயணம் எனக்கு பல குறிப்புகளை கொடுத்தது. கிராமப்புறத்தில் இருந்து ரோக்தக் மற்றும் பூனே சென்றேன். தற்போது மும்பையில் இருக்கிறேன். நான் பசுவின் வாலை பிடித்து நீச்சல் கற்றுக் கொண்டேன். உலக முழுவதும் பயணம் மேற்கொண்டு வித்தியாசமான கலாசாரங்களை பற்றி கற்றுக் கொள்ள வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. நான் இப்போது சமூகம் மற்றும் அரசியலில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்.நான் 15 வருடங்களாக இரு அறைகள் கொண்ட வீட்டில் இருந்தேன். அப்போது பெரிய வீடு வாங்குவது தான் எனது முதல் எண்ணமாக இருந்தது. எங்களிடம் போதுமான பணம் இல்லததால் ஒரு வருடத்திற்கு ஒரு ஜோடி ஷூக்கள் மட்டுமே வாங்க முடிந்தது.நான் எப்போது எனது கனவு இல்லத்தை வாங்கினேனோ அப்போது எனக்கு தோன்றியது அடுத்த முறை இதைவிட பெரிதாக வாங்க வேண்டும் என்று. அது மனிதர்களின் இயல்பு தானே. இருப்பதை வைத்து எப்போதும் சந்தோஷமாக வாழமாட்டோம்” என்றார்.நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத்தின் இந்த வருடத்தில் ரூ.20 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு இடங்களை வாங்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
