இலங்கை
எல்.பி.எல் ஆட்ட நிர்ணயம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு!
எல்.பி.எல் ஆட்ட நிர்ணயம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு!
2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக விளையாட்டு ஊழல் தடுப்புப் பொலிஸ் பிரிவு இன்று (3) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜையான தமீம் ரஹ்மானுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தமீம் ரஹ்மானும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளதாக விளையாட்டு ஊழல் தடுப்புப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, வழக்கைத் தொடங்க குறுகிய காலத்தை வழங்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
