Connect with us

இலங்கை

காருக்கு லீஸ் கட்ட வழியின்றி இருந்தவர் இன்று 15 கோடி ரூபா சொத்துக்கு அதிபதி!

Published

on

Loading

காருக்கு லீஸ் கட்ட வழியின்றி இருந்தவர் இன்று 15 கோடி ரூபா சொத்துக்கு அதிபதி!

  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து வந்தவர் இன்று கொழும்பில் நாமலின் வீட்டை சுற்றி திரிகிறார் .

ஒருவேளை ஐஸ்லாந்தில் சுகாதார அமைச்சராக வரலாம் என கனவு காண்கிறார் போல, சுகாதார அமைச்சராக வந்தால் ஊழல் செய்யலாம் கஞ்சா கடத்தலாம் என நினைக்கிறாரோ தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணை பணம் கட்ட காசு இல்லை என புலம்பெயர் மக்களிடம் காசு சேர்த்தார்.

Advertisement

அவரிடம் காசு கொடுத்து ஏமார்ந்து புலம்பெயர் தேசத்தவர்கள் இருந்தால் , இலங்கை நீதித்துறையை நாடினால் அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவருக்கு சிறைத்தண்டனையையும் பெற்றுக்கொடுக்க முடியும்.

புலம்பெயர் தேசத்தவர்களை ஏமாற்றி 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் அமைப்பை காட்டி கொடுத்த பரம்பரையை சேர்ந்தவர். அவரது உடலில் ஓடுவது காட்டிக்கொடுக்கும் பரம்பரையை சேர்ந்தவர்களின் இரத்தம்.

Advertisement

துறைமுகத்தில் விடுவிக்கப்பட்ட 350 கொள்கலன்கள் விடுதலைப்புலிகளுடையது என காட்டிக்கொடுத்தார்.

அவர் என்ன நோக்கத்திற்காக அது தொடர்பில் பேசினார் என எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மேலும் தெரிவித்தார்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன