இலங்கை
கெஹல்பத்தர பத்மேவின் தாயார் மனு தாக்கல்
கெஹல்பத்தர பத்மேவின் தாயார் மனு தாக்கல்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்று அறிவித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறைக்கு வெளியே தனது மகன் வேறு எந்த இடத்திற்கும் மாற்றப்படுவதைத் தடுக்க இடைக்கால உத்தரவையும் கெஹல்பத்தர பத்மேவின் தாயார் கோரியுள்ளார்.
