பொழுதுபோக்கு
கோடிகளை குவிக்கும் தனுஷ்… வசூலில் வலுவாக இருக்கும் இட்லி கடை; 2-வது நாள் கலெக்சன் என்ன?
கோடிகளை குவிக்கும் தனுஷ்… வசூலில் வலுவாக இருக்கும் இட்லி கடை; 2-வது நாள் கலெக்சன் என்ன?
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இட்லிகடை’. இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய் , சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இட்லிகடை’ திரைப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.21 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் நேற்று பார்வையாளர்கள் வருகை நிலவரப்படி, ‘இட்லி கடை’ திரைப்படத்தின் காலை காட்சிகள் 34.98 சதவிகிதம் என மிதமாகத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, பிற்பகல் காட்சிகள் 70.02 சதவிகிதமாகவும் மாலை காட்சிகள் 69.21 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. இரவு காட்சிகள் 65.26 சதவிகிதமாக இருந்துள்ளது. தெலுங்கில் காலை காட்சிகள் 11.01 சதவிகிதமாகவும் மாலை மற்றும் இரவு காட்சிகள் 28 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’இட்லிகடை’ திரைப்படம் வெளியான முதல் நாளே இப்படம் ஓ.டி.டி-யில் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்துவிட்டனர். அதன்படி, ‘இட்லி கடை’ திரைப்படம் நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரத்திற்கு பிறகு ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
